சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் மீண்டும் கேட்கத்தூண்டும் ரகம். தாராவியின் அழுக்கை, அழகியலை கண்முன் கொண்டுவந்த விதத்தில் முரளியின் ஒளிப்பதிவு கவர்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் நேர்த்தியான எடிட்டிங் படத்துக்கு பக்கபலம். இதேபோல மும்பை தாராவியை தத்ரூபமாகத் திரையில் கொண்டுவந்த கலை இயக்குநர் ராமலிங்கத்தின் உழைப்பும், மெனக்கெடலும் அற்புதம்.