படத்தின் கதை, துணை நடிகர்களின் பங்களிப்பு என அனைத்தும் நன்றாக இருந்தாலும், படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் என்பது காலாவின் வீரியத்தை சற்றே குறைத்துக் காட்டுகிறது. படத்தின் 2-வது பாதியில் இடம்பெறும் போராட்டக்காட்சிகள் மற்றும் நீளமான வசனங்களுக்கு 'லைட்டாக' கத்திரி போட்டிருந்தால், 'காலா' இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.