தொடர்ந்து தனது படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை எடுத்துரைக்கும் ரஞ்சித், இப்படத்திலும் குடிசைப்பகுதி மக்களின் வாழ்வியலை அவர்களின் வலிகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
நாயகன் ஏழைகளுக்காக போராடுவது என்ற தமிழ் சினிமாவின் 'அக்மார்க்' கதைதான் என்றாலும்,தொழில்நுட்பக்குழு மற்றும் துணை நடிகர்களின் பங்களிப்பு ஆகியவற்றில் ரஞ்சித்தின் முத்திரை தனித்துத் தெரிகிறது.குறிப்பாக ரஜினியை அவர் கையாண்ட விதம் சிறப்பு. இதேபோல தமிழகத்தின் சமீபகால போராட்டங்களை போல படத்தின் காட்சிகளை அமைத்த விதமும் நன்று.