ரஜினி தனது வழக்கமான டிரேட்மார்க் நடிப்பை அலட்டிக்கொள்ளாமல் கொடுத்திருக்கிறார்.வில்லனாக நடித்திருக்கும் நானா படேகர் தனது அமைதியான,அதேசமயம் அழுத்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார். இதுதவிர துணை நடிகர்களும் தங்களது பங்களிப்பினை முழுமையாக வழங்கியுள்ளனர்.
பொதுவாக பெரிய ஹீரோக்ளின் படங்களில் துணை நடிகர்களின் கதாபாத்திரங்களுக்கு அதிக அழுத்தம் இருக்காது. ஆனால் ஈஸ்வரிராவ்,சமுத்திரக்கனி,ஹீமா குரேஷி,அருள் தாஸ்,திலீபன்,அஞ்சலி ராவ்,சம்பத் என துணை நடிகர்கள் அனைவரும் தங்களது பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளனர்.
குறிப்பாக ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரி ராவ் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்கிறார். அதேபோல ரஜினியின் முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேஷி ரஜினியைப் பகைத்துக் கொள்வது, பின்னர் உண்மை தெரிந்து ரஜினிக்கு பக்கபலமாக இருப்பது என அதிரடியான நடிப்பினை வழங்கி இருக்கிறார்.