மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு ஆகியவற்றை தன் அடிநாதங்களாகக் கொண்டு செயல்பட்டவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. 1965ல் இந்தி ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டபோது தமிழகம் போர்க்களமானது. தி.மு.கவைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற தொண்டர் தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கோண்டார். பின்னால் விலக்கிக் கொள்ளப்பட்ட மத்திய அரசின் இந்தித் திணிப்பு முடிவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவர் கருணாநிதி. டால்மியாபுரத்தை கல்லக்குடி என்று பெயர் மாற்றும் போராட்டத்தை தலைமை வகித்து முன்னெடுத்துச் சென்றவர் கருணாநிதி.