பின்பு 1967ல் முதன்முதலாக தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்றிருந்தார் கருணாநிதி. ஆனால் உடல் நலக்குறைவின் காரணமாக 1969ல் அண்ணா அகால மரணமடைந்து விட அடுத்து யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. கட்சியில் இருந்த பெரும்பான்மையோரின் ஆதரவுடன் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றார்.