இளம்வயது முதலே கலை, எழுத்து மற்றும் அரசியல் மீது ஆர்வம் கொண்ட கருணாநிதி 1944ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தில் இணைந்து பின் 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க 1957ல் தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டது. அந்த தேர்தலில் தி.மு.க தான் போட்டியிட்ட 112 இடங்களில் 15ல் வென்றது. அந்த 15 பேரில் குளித்தலை தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற கருணாநிதியும் ஒருவர்.