எழுத்திலும் பேச்சிலும் அனலாகச் சிறந்த கருணாநிதி தனது சமூகக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு திரை ஊடகத்தையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். மந்திர குமாரி, ராஜகுமாரி மற்றும் மருத நாட்டு இளவரசி ஆகிய திரைப்படங்களில் அனல் தெறிக்க வசனம் எழுதியிருந்த கருணாநிதி 1952ல் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு எழுதியிருந்த சிறப்பான வசனங்கள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன.