கைரிக்ஷா ஒழிப்பு, பேருந்துகள் நாட்டுடைமையாக்கம், குடிசை மாற்று வாரியம் அமைத்தல், சிப்காட் உருவாக்கம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சட்டம் மற்றும் பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் என பல சமூக நீதித் திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. தமிழ் மற்றும் திருவள்ளுவரின் பெருமையை பறைசாற்றும் வகையில் குமரியில் 133 அடியில் வள்ளுவர் சிலையைத் திறந்தார்.