தரமணிக்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பேரன்பு. இந்த படத்தில் மம்முட்டி, சாதனா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த படம் உருவான விதம் குறித்து இயக்குநர் ராம் Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், இந்த ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட்ட போது அங்குள்ள மக்கள் படம் பார்த்து கண்ணீர் சிந்தினர். வீட்டுக்கு சாப்பிட வாருங்கள் என எங்களை அழைத்தனர்.
அது எங்களுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் இப்படித்தான் வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. எனக்கு என்னுடைய படம் சர்வதேச திரைப்பட விழாக்களல் திரையிடப்பட வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
அதனால் என்னுடைய தயாரிப்பாளர் தேனப்பனிடம், படம் முடிந்து ஒரு வருடம் கழித்து தான் திரையரங்குகளில் வெளியாகும், இதற்கு சம்மதம் என்றால் தான் நான் படம் இயக்குவேன் என்றேன். அதற்கு தயாரிப்பாளரும் ஒகே சொன்னார்' என்றார்.