STM Mob Banner USA
VRV Mob Banner USA

தமிழுக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ‘அர்ஜுன் ரெட்டி’

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘நோட்டா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய் தேவரகொண்டாவின் அடுத்த தமிழ் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vijay Deverakonda's 'Dwaraka' tamil version has been titled as 'Arjun Reddy'

தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் டோலிவுட், பாலிவுட், கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில், தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களின் மனதை கவர்ந்த ‘துவாரகா’ திரைப்படம் தமிழில் ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தலைப்பில் வெளியாகிறது.

இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக பூஜா ஜவேரி நடித்துள்ளார். இப்படத்தை ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கிறார்.

தெலுங்கில் இப்படத்தை இயக்கிய ஸ்ரீனிவாச ரவீந்திரா இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். பாடல் பதிவுடன் இப்படத்தின் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

காதல், ஆக்ஷன், கமர்ஷியல் மூன்று ஒருசேர கலந்த கலவைதான் இந்த 'அர்ஜுன்ரெட்டி'. அந்த அர்ஜுன் ரெட்டியை போலவே இந்த அர்ஜுன் ரெட்டியும் மிகுந்த வரவேற்பை பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Vijay Deverakonda's 'Dwaraka' tamil version has been titled as 'Arjun Reddy'

People looking for online information on Arjun Reddy, Arjun Reddy Tamil Version, Dwaraka, Vijay Deverakonda will find this news story useful.