தனது கல கல கேள்விகளால் சின்னத்திரை தொகுப்பாளினியாக மக்களின் மனதை கவர்ந்தவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் டிவி தொகுப்பாளினியாக 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதற்கு பல்வேறு திரையுலங்க பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் டிடி Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி அவரது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் Behindwoods சார்பாக அவருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
பின்பு டிடியின் ஸ்டைலிலேயே தொகுப்பாளர் அக்னி கேள்விகள் கேட்டார். அப்போது நீங்கள் செய்யும் கடைசி நிகழ்ச்சி இது என்றால் யாரை பேட்டி காண விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு டிடி சற்றும் யோசிக்காமல் அஜித் என்றார்.
சின்னத்திரை மட்டுமல்லாமல் நளதமயந்தி, விசில், பவர்பாண்டி உள்ளிட்ட படங்களிலும் டிடி நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்வம் தாளமயம் திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.