சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் பள்ளியில் ரோட்ராக்ட் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார் அப்போது பேசிய அவர்,
மாணவர்களுக்கு அரசியல் தேவையற்றது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மாணவர்கள் மட்டுமல்ல, யாருமே அரசியலை நீக்கிவிட்டு வாழ முடியாது. ஓட்டு போடும் போது சற்று யோசித்து போடுங்கள்.
தமிழகம் எனும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதனை யாரும் தட்டிக் கொடுக்கவும் இல்லை. கொஞ்சவும் இல்லை. தற்போது 44 பேர் இறந்துள்ளனர். உங்களது பெற்றோர் உங்களை ராணுவத்திற்கு செல்ல வேண்டாம் என்றால் அவர்களிடம் சொல்லுங்கள். ராணுவத்தில் உயரிழப்பவர்களை விட சாலை விபத்தில் உயிரிழப்பவர்களே அதிகம் என்று.
பொது அறிவு கூட இல்லாதவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள். கூட்டணி எனும் கருப்புச் சட்டைக்குள் எனது புதுக்காலனியை அழுக்காக்க விரும்பவில்லை. கட்சியை தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிடமாட்டேன் என சொல்வது முறையல்ல என்றார்.