எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரட்க்டராகவே மாறி உயிர்கொடுப்பவர் பஹத் பாசில். அவரது திரைப்படங்களை தொடர்ந்து கவனித்து வந்தாலே இந்த உண்மை புலப்படும். இவர் சமீபத்தில் நடித்த கும்பலாங்கி நைட்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒட்டு மொத்த பாராட்டுக்களை பெற்றுவருகிறது.
இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் அதிரன். இந்த படத்தை விவேக் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது சாய் பல்லவி நடிக்கும் மூன்றாவது மலையாளப்படமாகும். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜிப்ரான் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஜிப்ரான், இந்த படத்தில் பின்னணி இசையமைப்பது கடும் சவாலாக இருந்தது. இந்த படத்தில் பணிபுரிவது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதிரன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ராட்சசன் திரைப்படத்தில் தனது மிரட்டலான பின்னணி இசையமைத்து ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார்.
BGM is more challenging in my first debut movie in Malayalam #Athiran. Direction by #Vivek, Starring one of the finest actors in the industry #FahadhFaasil @Sai_Pallavi92 , I'm glad to be a part of this movie and crew. pic.twitter.com/Il1jc36XD8
— Ghibran (@GhibranOfficial) February 17, 2019