அப்போவே தெரியும்; சூர்யா-ஜோதிகா காதல் குறித்து பிரபல இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கோலிவுட்டின் சிறந்த காதல் தம்பதியான சூர்யா-ஜோதிகாவின் காதல் பற்றிய சுவாரஸ்ய தகவலை இயக்குநர் மகிழ் திருமேனி பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Director Magizh Thirumeni Reveal Unknown Stories of Suriya Jyothika Love

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ முதல் ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் வரை சுமார் 6  திரைப்படங்களில் சூர்யா-ஜோதிகா இணைந்து நடித்துள்ளனர். இதில் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர்கள் நடித்த ‘காக்க காக்க’ திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சூர்யா-ஜோதிகாவின் அலட்டிக்காத காதல் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தது. இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவிய சூழலில், ‘காக்க காக்க’ திரைப்படத்தின் போது நடந்த சுவாரஸ்ய தகவலை அந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மகிழ் திருமேனி பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘தடம்’ திரைப்படம் வரும் மார்ச்.1ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் ஒளிப்பதிவாளர் கோபிநாத் கூட்டாக Behindwoods தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அவர், ‘காக்க காக்க’ படத்தின் போதே ஒரு கட்டத்தில் சூர்யா-ஜோதிகா காதல் குறித்து தெரியவந்ததாக கூறினார். மேலும், கவுதம் மேனனின் ‘மின்னலே’ படத்தினால் ஈர்க்கப்பட்டு அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய போது, காதல் டேட்டிங் செல்ல தனக்கு அவர் உதவியதாகவும் கூறினார்.

அப்போவே தெரியும்; சூர்யா-ஜோதிகா காதல் குறித்து பிரபல இயக்குநர் VIDEO

Director Magizh Thirumeni Reveal Unknown Stories of Suriya Jyothika Love

People looking for online information on Gautham Menon, Jyothika, Kakkha Kakkha, Magizh Thirumeni, Suriya, Suriya Jyothika Love, Thadam will find this news story useful.