சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் ‘வர்மா’ திரைப்படத்தின் புதிய ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் திரைப்படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் உருவாகி வருகிறது. இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கியிருந்தார்.
ஆனால், இப்படத்தின் இறுதி வடிவம் திருப்தி அளிக்காததால் படத்தை கைவிடுவதாகவும், துருவ் விக்ரமை வைத்து மீண்டும் இப்படத்தை வேறு புதிய படக்குழுவுடன் உருவாக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு இயக்குநர் பாலா தரப்பில், படைப்பு சுதந்திரம் கருதி படத்தில் இருந்து விலகியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய இயக்குநர், நாயகி, இதர கதாபாத்திரங்களுக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டமாக வர்மா படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவர், பாலிவுட்டில் நடிகர் வருண் தவான் நடித்த ‘அக்டோபர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
Banita Sandhu and Dhruv Vikram to romance in the new Tamil version of Arjun Reddy@BanitaSandhu @sri50 @cvsarathi @igtamil @TFU_Kannan @proyuvraaj @onlynikil @radhanmusic @Madaboutmoviez @Forumkeralam1 @VRFridayMatinee @MalayalamReview @AndhraBoxOffice @taran_adarsh @e4echennai pic.twitter.com/xMO2abT0vn
— E4 Entertainment (@E4Emovies) February 16, 2019