சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'கனா' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தர்ஷன். இவர் அடுத்ததாக பேண்டஸி ஜானரில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் தொலைக்காட்சி புகழ் தீனாவும் நடிக்கிறார். அனிருத் மற்றும் விவேக் - மெர்வின் இணைந்து இசையமைக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் தெரிவித்ததாவது, நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன்.
நான் சொன்னது போல, நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றார்.