‘அகவன்’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியின், தாயின் மகத்துவம் பற்றியும் பேசினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆரம்ப காலம் முதலே ரசிகராய் இருந்தவர் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். ரஜினிகாந்தை போலவே எளிமையாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது தயாரிப்பாளராக ஜெயித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் அடிக்கடி தனது ரசிகர்களிடம் கூறுவது, குடும்பத்தை பாத்துக்கணும், ஆன்மிகத்தில் ஆர்வம் செலுத்தணும் என்பார், அதை பின்பற்றியே வாழ்வில் ஜெயித்தவர் ரவிச்சந்திரன். ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ரவிச்சந்திரன் உதாரணம் என்றார் லாரன்ஸ்.
யாருக்கும் துரோகம் நினைக்காதவர் ரஜினிகாந்த், அவரை பற்றி பிறர் தவறாக பேசினால் கூட, விடு கண்ணா சின்ன பசங்க பேசிட்டு போகட்டும்.. ஆண்டவன் பாத்துப்பான்னு சொல்வார். எதிரிக்கும் உதவணும்னு நினைக்கிறவர் சூப்பர் ஸ்டார் என லாரன்ஸ் பேசினார்.
இதைத் தொடர்ந்து தாயின் மகத்துவம் குறித்து பேசிய அவர், இன்றைக்கு பலரும் செல்போனுக்கு கொடுக்கிற மரியாதை கூட அம்மாவுக்கு தரதில்ல. ஆஸ்ரமத்தில் கொண்டு போய் விடுறாங்க என்றார். பின்னர் தனது உரையின் இறுதியில் குடிக்க தண்ணீர் கேட்டார், தயாரிப்பாளர் தண்ணீர் கொடுத்ததும் என் ஓட்டு உங்களுக்குத் தான் என கூறிவிட்டுச் சென்றார்.