இன்னும் முப்பதே நாள் - விஜய் ரசிகர்களுக்கு தளபதி 63 டீம் தரும் சர்ப்ரைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்- இயக்குநர் அட்லீ கூட்டணியில் தயாராகி வரும் படம் தளபதி 63. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

vivek lyricist tweet about vijay atlee thalapathy 63 first look release

ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர் விவேக் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி இன்னும் 30 நாட்களில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்.

Vivek lyricist tweet about vijay atlee thalapathy 63 first look release

People looking for online information on AtleeKalpathi S. Aghoram - AGS Entertainment, Nayanthara, Thalapathy 63, Vijay will find this news story useful.