விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் : எதிர்ப்பார்ப்பை எகிறவிடும் சியானின் DARK லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் | vikram ajay gnanamuthu's cobra first look to release

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் மிர்னாலினி ரவி, ஶ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த அறிவிப்புடன் விக்ரம் இருட்டில் நிற்பது போல ஒரு போட்டோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நரம்புகள் புடைக்க கட்டுமஸ்தாக இருக்கும் சியானின் போட்டோ வைரல் ஆகி வருகிறது.

Entertainment sub editor

விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் | vikram ajay gnanamuthu's cobra first look to release

People looking for online information on Ajay Gnanamuthu, Cobra, First Look, Mirnalini Ravi, Vikram will find this news story useful.