'கபாலி' படத்துக்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்யா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் முனைப்பில் இருக்கிறார். இந்த படத்தில் ஆர்யா பாக்ஸராக நடிப்பதாக கூறப்படுகிறது. அதற்காக கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடற்கட்டுடன் தோற்றமளிக்கும் புகைப்படத்தை ஆர்யா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டார்.
இந்நிலையில் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கம் மூலம், ''தலைநகர் டெல்லியில் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளதை பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு. ஆனால் பாஜக அரசு அடிப்படைவாதத்திற்கு திட்டமிட்டு திசை திருப்பி வருகிறது. மேலும் தமிழ்நாட்டிலும் அதே போல் முயற்சி நடக்கிறது. பாசிசத்திற்கு எதிராக ஒன்றினைவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு படத்துக்கு பிறகு பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக 5 படங்களை தயாரிக்கவிருக்கிறார். இந்த படங்களை லெனின் பாரதி, மாரி செல்வராஜ், சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், ஃபிராங்க்ளின் ஆகியோர் இயக்கவிருக்கின்றனர். இந்த படங்களை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸ், லிட்டில் ரெட்கார் நிறுவனங்கள் தயாரிக்கவிருக்கின்றன.
It’s so disheartening to see the communal fascist forces unleashing violence in the Nation’s capital.India is a secular democratic nation.The ruling BJP government is systematically turning this country to fundamentalism & trying the same in Tamilnadu.Lets unite against fascism!
— pa.ranjith (@beemji) February 26, 2020