மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவம் தெரிய வந்துள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, படத்தின் ஆர்ட் டைரக்டர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படக்குழு கொண்டாடியிருக்கிறது. பொதுவாக தன்னுடன் போட்டோ எடுக்கும் ரசிகர்களிடம், அழுத்தி முத்தம் கொடுப்பது விஜய் சேதுபதியின் வழக்கம். அப்படி சதீஷ் குமாருக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த போது, அதை பார்த்து விளையாட்டாக விஜய் முத்தம் கேட்க, விஜய் சேதுபதி அவருக்கும் தனது ட்ரேட் மார்க் முத்தத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மொத்த கூட்டமும் கை தட்டி, ஆரவாரம் செய்ததாக சொல்லப்படுகிறது.