விஜய் சேதுபதி சொன்ன பஞ்ச்... வெட்கப்பட்டு சிரித்த தளபதி.. படத்துல தரமான சம்பவம் இருக்கும் போல..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று (15.03.2020) நடக்க இருக்கிறது.

மாஸ்டர் ஆடியோ லான்ச் விஜய் பற்றி விஜய் சேதுபதி கூறியது Vijay Sethupathi Stunning Speech On Thalpathy VIjay And Master Vijay Epic Reaction

இந்நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக, வில்லன் விஜய் சேதுபதி என்ன பேசப்போகிறார் என்றும் பலர் காத்திருந்தனர். மேடையில் ஏறிய விஜய் சேதுபதி " ப்ர்ஸ்ட் போஸ்டர் ரெடி பண்ணும் பொது கூட,  விஜய் சார் தான் என் பெயரை போஸ்டர்ல போட சொன்னாராம் அதை கேட்டு ரொம்ப ஷாக் ஆனேன். செட்ல நான் கொஞ்சம் நிறைய பேசுவேன்.  விஜய் சார் கிட்ட ஒரு நாள் கேட்டேன் ஏன் சார் பேசவே மாட்டேங்குறீங்கனு?" ஒரு சொன்னாரு "நான் ஒரு அப்சர்வர் யார் சொன்னாலும் கேட்டுப்பேன்".

பின்னும் தொடர்ந்த அவர் "விஜய் சார் ரொம்ப ஸ்மார்ட். க்யூட். அவரு வெட்கப்படுறாரு பாருங்க... ஒரு க்ளோஸ் வைய்யுங்கப்பா.." என்று சிரிக்க, விஜய்யும் சிரிக்கிறார்.

பின்பு "இந்தப் படத்துல நான் தான் ஹீரோ. ஏன்னா அவருக்கு நான் வில்லன்னா, எனக்கு அவரும் வில்லன் தான" என்று ஒரு மாஸ் பன்ச் டையலாக்குடன் விடைபெற்றார் விஜயசேதுபதி. மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்ய அந்த இடமே அதிர்கிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் ஆடியோ லான்ச் விஜய் பற்றி விஜய் சேதுபதி கூறியது Vijay Sethupathi Stunning Speech On Thalpathy VIjay And Master Vijay Epic Reaction

People looking for online information on Master, Master Audio Launch, Vijay, Vijay Sethupathi will find this news story useful.