தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் பிரபல நடிகர் ஷாந்தனு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்து அவரது ட்விட்டர் பதிவுகள் தளபதி ரசிகர்களை குஷிபடுத்திவந்தது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஷாந்தனு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, முதலில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவிற்கும், என்னோட நண்பர் பிரதர் லோகேஷிற்கும் நன்றி. கிட்டத்தட்ட 10 வருஷமா நடிக்கிறேன். ஆனா இதான் என் முதல் படம்னு சொல்லுவேன். ஏன்னா இதான் என்ன மக்கள் கிட்ட மறுபடியும் கொண்டு சேர்க்கப்போகுது.
லோகேஷோட 'மாநகரம்', 'கைதி'லயே நடிக்க வேண்டியது. இப்போ தான் அமைந்தது. விஜய்னா பத்தி குட்டி ஸ்டோரி, சின்ன வயசுல இருந்து அவர் படம் பார்த்து வளர்ந்தேன். என்னோட மேரேஜ்க்கு தாலி எடுத்து கொடுத்தாரு. என்மேல ஒரு கேரிங்கா அன்போட விஜய்னா இருக்காரு. நானும் அவர் கூடவே ஒரு ஃபேனா இருக்கணும்னு ஆசைபடுறேன்'' என்றார்.
'கைதி' பட வில்லன் அர்ஜூன் தாஸ், 'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் பேசும்போது, 'பிகில்' இசை வெளியீட்டின் போது தெரிஞ்சவங்களிடம் பாஸ் கிடைக்குமா? என்று கேட்டேன். ஆனா நேத்து எனக்கு ஃபோன் பண்ணி என்கிட்ட கேட்டாங்க.
காலையில எழுந்து ஷூட்டிங் போனா, விஜய் சேதுபதி சார் வந்து கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தாரு.. அப்புறம் விஜய் சார் செட்ல இருப்பாரு இத விட என்ன வேணும்? மூனு மாசம் விஜய் சாரோட டிராவல் பண்ணிருக்கேன். உங்ககிட்ட இருந்து 1 சதவீதம் நான் கத்துக்கிட்டா எங்க அம்மா பெருமைபடுவாங்க. நான் விஜய் மற்றும் விஜய் சேதுபதி கூட ஃபோட்டோ எடுக்கல. நான் அந்த நிமிடத்தில் வாழந்தேன்'' என்றார்.