சூர்யாவின் ’சூரரைப் போற்று’ டீசர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

என்ஜிகே, காப்பான் திரைப்படங்களுக்குப் பிறகு சூர்யா நடித்துள்ள படத்துக்கு ’சூரரைப் போற்று’ என்று பெயர்சூட்டியுள்ளனர். துரோகி, இறுதி சுற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார்.

Suriya's Soorarai Pottru teaser release date is here

அப்பர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் குனித் முங்கா இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு நிக்கிதா பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் மோகன்பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 7ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன்  தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் புதிய போஸ்டரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கெனவே வெளியாகியிருந்த போஸ்டரில் ’பருந்தாகுது ஊர்க்குருவி’ என்று இடம்பெற்றிருந்த வரிகள் பேசப்பட்டன.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Suriya's Soorarai Pottru teaser release date is here

People looking for online information on Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.