அசுரன் படத்துக்கு பிறகு துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ், மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் டி40 ஆகிய படங்களின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்ததாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தனுஷுடன் ரஜீஷா விஜயன், யோகி பாபு, லால் ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் நட்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை வி கிரியேஷர்ன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
டி41 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட இந்த படத்துக்கு தற்போது ’கர்ணன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னதாக ரஜினி படங்களின் டைட்டில்களான ‘பொல்லாதவன்’, ‘படிக்காதவன்’ ஆகியவை தனுஷின் திரைப்படங்களுக்கு பயன்படுத்தப்பட்டன. இப்போது சிவாஜி கணேசனின் பட டைட்டிலான ‘கர்ணன்’ அந்த வரிசையில் இணைந்துள்ளது.
Thank you @dhanushkraja sir and @theVcreations sir for collaborating in one of my most favourite scripts of all time. Wishes dear @mari_selvaraj. Honoured to be part of this epic ! #கர்ணன் #Karnan
— Santhosh Narayanan (@Music_Santhosh) January 5, 2020