ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லரை விவாதித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதிவருகின்றனர்.
'தர்பார்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு வீழா மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது போலீஸ் என்பது கொஞ்சம் சீரியஸான வேடம். அதனால் தவிர்த்து வந்தேன். ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை சுவாரஸியமாக இருந்தது. 'மூன்று முகம்' படத்தில் அலெக்ஸ் பாண்டியன் வேடம் மிகவும் பிரபலம். அந்த அளவிற்கு இது இந்த வேடம் இருந்தது.
இந்த படத்துல ஒரு சோகம் இருந்தது. அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் அளவிற்கு இந்த வேடம் இல்லையென்றால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள். அதனால் ஏ.ஆர்.முருகதாஸ் மிக கவனமாக இந்த கேரக்டரை வடிவமைத்திருக்கிறார்.
அமிதாப் பச்சன் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் சென்னையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது என்னிடம் மூன்று விஷயங்களை கடைபிடிக்க சொன்னார். 1, தினமும் உடற்பயிற்சி செய்ய சொன்னார். 2, எப்பொழுதுமே உன்னை பிஸியாக வைத்துக் கொள்ள சொன்னார். 3. அரசியலுக்கு போகாதே என்றார். ஆனால், மூன்றாவது விஷயத்தை என்னால் கடைபிடிக்க முடியவில்லை'' என்றார்.