கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கும் ’தம்பி’ வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. கமலை வைத்தை 'பாபநாசம்' எடுத்த ஜீத்து ஜோசம் இயக்கிய இந்த படத்தை வையாகாம் 18, பேரலல் மைண்ட் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்தது.
இந்நிலையில் ஜீத்து ஜோசம் மீண்டும் மலையாளத்தில் ஒரு திரைப்படம் உருவாக்க திட்டமிட்டுள்ளார். அபிஷேக் ஃபிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘ராம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
முன்னணி மலையாள நடிகர் மோகன் லால் ஹீரோவாகா நடிக்கும் இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். ஏற்கெனவே லால்-ஜீத்து கூட்டணியில் உருவான ’திரிஷ்யம்’ பெரும் வெற்றிபெற்று பல மொழிகளில் ரீமேக் ஆனது. மீண்டும் இந்த காம்போ இணைவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.