அந்த கடவுள் கிட்டயே பேசுன மொமன்ட் - சச்சினிடம் ரிப்ளை வாங்கிய பிரபல தமிழ் ஹீரோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிரிக்கெட் வீரர் சச்சின் ட்விட்டரில் ரிப்ளை செய்துள்ளதால் பிரபல தமிழ் ஹீரோ செம குஷியில் இருக்கிறார். 

தமிழ் ஹீரோவுக்கு சச்சின் ரிப்ளை | sachin tendulkar replies to harish kalyan's twitter post for his birthday wish

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடித்த பியார் ப்ரேமா காதல், இஸ்பேடுராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்கள் இளசுகளுக்கு ரொம்பவே பிடித்து போனது. மேலும் இவர் நடிப்பில் அண்மையில் வெளியான தாராள பிரபு, லாக்டவுன் காரணமாக திரையரங்கில் ஓட முடியாமல் போனாலும், ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம்களில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஒரு செம ரிப்ளை ட்விட்டரில் கிடைத்துள்ளது. 2011-ல் ட்விட்டருக்கு வந்த ஹரிஷ் கல்யாண், அப்போதிலிருந்தே ஒவ்வொரு வருடமும் தவறாமல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார். சச்சினின் அதிதீவிர ரசிகரான இவர் இந்த வருடமும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டினார். இதனிடையே ஹரிஷ் கல்யாணின் இந்த பதிவுக்கு சச்சின் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சுமார் 10 ஆண்டுகளாக அவரது பிறந்தநாளுக்கு பதிவிட்டு வரும் ஹரிஷ் கல்யாண் இந்த ரிப்ளையால் செம குஷியில் உள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த கடவுளே ரிப்ளை செய்த தருனம் என பதிவிட்டுள்ளார். 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

தமிழ் ஹீரோவுக்கு சச்சின் ரிப்ளை | sachin tendulkar replies to harish kalyan's twitter post for his birthday wish

People looking for online information on Dharala Prabhu Tamil, Harish Kalyan, Sachin tendulkar will find this news story useful.