விஜய்யின் மாஸ்டர் லாக்டவுன் வீடு - மாளவிகா மோகனன் இப்போ ஹாப்பி அண்ணாச்சி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பிடித்ததை பற்றி பதிவிட்டிருக்கிறார். 

மாளவிகா மோகனனுக்கு இதுதான் பிடிக்குமாம்| vijay's master actress malavika mohanan reaction over master quarantine edit

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன், படத்தின் ரிலீஸுக்கு முன்பே பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்வசம் கொண்டுள்ளார். 

இதனிடையே மாஸ்டர் படக்குழுவின் லாக்டவுட் வீடு எனும் கற்பனையில் ஒரு ஓவியம் வரையப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது. இதில் மாளவிகா மோகனன் வீட்டில் சமைப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு மாளவிகா மோகனன், பெண்கள் என்றால் சமைக்கத்தான் வேண்டும் என்ற பாகுபாடு எப்போது மாறுமோ என ட்விட்டினார். இந்நிலையில் அந்த போட்டோவில் சிறு மாற்றம் செய்யப்பட்டு, அவர் புத்தகம் படிப்பது போல புதிய போட்டோ வெளியானது. 

இதை குறிப்பிட்டுள்ள மாளவிகா மோகனன், ''எனக்கு இந்த வெர்ஷன் ரொம்பவே பிடித்திருக்கிறது. எனக்கு புத்தகம் படிப்பதுதான் பிடிக்கும் என எப்படி கண்டுபிடித்தீர்கள்'' என பதிவிட்டுள்ளார். 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாளவிகா மோகனனுக்கு இதுதான் பிடிக்குமாம்| vijay's master actress malavika mohanan reaction over master quarantine edit

People looking for online information on Malavika Mohanan, Vijay will find this news story useful.