BREAKING : தளபதி 64-ன் இசையமைப்பாளர் இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rockstar Anirudh is the music director of Vijay's Thalapathy 64

’தெறி’, ‘மெர்சல்’ திரைபப்டங்களை தொடர்ந்து விஜய்-அட்லி கூட்டணியில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில் கதிர், விவேக், யோகிபாபு, ரெபா மோனிகா, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷ்ரோஃப், இந்துஜா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைபப்டத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ‘மாநகரம்’, ‘கைதி’ திரைப்படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

தற்போது அப்படத்தை  பிவி கம்பைன்ஸ் மற்றும் எஸ்தெல் எண்டர்டெயின்மென்ட் ஆகிய சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் பிரிட்டோ என்பவர் தயாரிக்கவிருப்பதாக தெரிகிறது.

இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ‘கத்தி’ திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rockstar Anirudh is the music director of Vijay's Thalapathy 64

People looking for online information on Anirudh Ravichander, Brito, Lokesh Kanagaraj, Thalapathy 64, Vijay will find this news story useful.