'தளபதி 64' படத்தை தயாரிக்கும் சினேகா பிரிட்டோ யார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தற்போது நடித்து வரும் நடிகர் விஜய், அடுத்ததாக  சினேகா பிரிட்டோ தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Vijay and Lokesh Kanagaraj's Thalapathy 64

சினேகா பிரிட்டோ  ‘சட்டம் ஒரு இருட்டறை 2’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

விஜய் நடிக்கவுள்ள 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தை தயாரிப்பது சினேகா பிரிட்டோ என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ‘தளபதி 64’ படத்தில் அவர் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சினேகா பிரிட்டோவின் தந்தை பி.விமல் என்பவர் விஜய் ஆரம்பகாலத்தில் நடித்த ‘ரசிகன், தேவா மற்றும் ‘செந்தூரப்பாண்டி’ போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Lokesh Kanagaraj's Thalapathy 64

People looking for online information on Anirudh Ravichander, Thalapathy 64, Vijay will find this news story useful.