'தர்பார்' படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவா இயக்கத்தில் 'தலைவர் 168' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் டி. இமான் இணைந்துள்ளார்.
இந்நிலையில் மகாநடி படத்துக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட தலைவர் 168 படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கேக் வெட்டிக் கொண்டாடினர். உடன் இயக்குநர் சிவா, சூரி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Team #Thalaivar168 congratulates @KeerthyOfficial for winning the National Award for Best Actress.#66thnationalfilmawards pic.twitter.com/z93EQ22fST
— Sun Pictures (@sunpictures) December 25, 2019