'குஷி' படத்தில் தளபதி விஜய்யுடன் சிறு வேடத்தில் நடித்திருந்த ஷாம் '12B' படத்தின் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'உள்ளம் கேட்குமே', 'இயற்கை', 'லேசா லேசா' போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் 'புறம்போக்கு எனும் பொதுவுடமை' படத்தில் துடிப்பான ஜெயிலராக நடித்திருந்த அவரது வேடம் அனைவரையும் ரசிக்க வைத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஷாம் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஷாம் தனது திரைப்பட அனுபவங்கள், தனது குடும்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''கிட்ஸ் சென்ட்ரல் என்ற பள்ளியில் எனது மகள்கள் படிக்கிறாங்க. தலய அங்க தான் சந்திக்கிறதுக்கான வாய்ப்பு கிடைக்கும். அஜித் சாரோட பொண்ணு அங்க தான் படிக்கிறாங்க.
ஸ்கூல்க்கு கல்ச்சுரல்ஸ் உள்ளிட்ட விஷயங்களுக்கும் போய்டுவேன். அப்பா என்பதற்காக போவேன். மேலும் அங்க மட்டும் தான் அவரை பார்க்க முடியும். அப்போ கேட்பாரு என்ன ஃபிட்டா இருக்கீங்க, அதுக்கு, சைக்கிளிங்லாம் பண்ணிட்டு இருக்கேன் என சொல்வேன். ஜாலியா பேசுவாரு'' என்றார்.