லாக்டவுன் நேரத்தில் பிரபலங்கள் தனது நேரங்களை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பதை தங்கள் சமூக வலைதளப்பக்கங்கள் வாயிலாக செலவிட்டு வருகின்றனர். இவை அவ்வப்போது வைரலாகி வருகிறது.
மேலும் அவர்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் வித்தியாசமான டாஸ்க்குகள் செய்து மற்ற பிரபலங்களிடமும் சேலேஞ்ச் விடுத்து வருகின்றனர். சமையல், உடற்பயிற்சி என பிரபலங்களின் பதிவுகள் ரசிகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த ஷில்பா மஞ்சுநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி ஃபோட்டோவை பகிர்ந்து ''நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கிருந்தே தொடங்குங்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதனை பயன்படுத்துங்கள். உங்களால் என்ன முடியுமோ அதனை செய்யுங்கள்'' என்று கருத்தை பதிவு செய்துள்ளார்.