பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. தனது செயல்களால் தமிழ் ரசிகர்கள் பலரது நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். தற்போது ஹர்பஜன் சிங் உடன் 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா, அங்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவரது நடனத்திற்கென்றே ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் லாஸ்லியா டிக்டாக் செயலியில் தற்போது தனது விடீயோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் மேஸ்ட்ரோ இளையராஜாவின் 'இளங்காத்து வீசுதே' பாடலை பாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் 'லாஸ்லியா இவ்வளவு நன்றாக பாடுவாரா?' என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். எனவே அந்த வீடியோ தற்போது மிகவும் வைரல் ஆகி வருகிறது.
Watch on TikTok