உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர்.
பிரபல இயக்குனரான குரீந்தர் ஷதா தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தனது அத்தை இன்று கொரோனாவால் மரணமடைந்த செய்தியை பகிர்ந்து உள்ளார். மேலும் அவர் உருக்கமாக அவர் என் அத்தை இந்தியாவில் இந்தியாவை பாகிஸ்தானுடன் பிரித்த போது கூட உயிரோடு இருந்தவர். ஆனால் இன்று அவர் இறக்கும் போது, அவருடன் ஒரு குடும்ப உறுப்பினர்களே இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைசியாக அந்த மருத்துவமனையில் இருந்த இரண்டு செவிலியர்கள் அவரது கைகளை பிடித்து அவர் இறக்கும் தருவாயில் அவருடன் இருந்து பிரார்த்தனை செய்துள்ளனர். அந்த நன்றியை நான் என்றும் மறக்கமாட்டேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
குரீந்தர் ஷதா ஒரு என்ஆர்ஐ இயக்குனர். இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கையை படமாக்குவது தான் இவரது ஸ்டைல். பத்திரிகையாளராக அறிமுகமானவர் பின்பு 1993 ஆம் ஆண்டு தனது comedy Bhaji on the Beach என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மேலும் போன்ற Bride and Prejudice, Angus, Thongs and Perfect Snogging பல வெற்றிப் படங்களை தந்துள்ளார்.