லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடித்துள்ள 'மாஸ்டர்' ரிலீஸிற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்துள்ளார்.
அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சத்யன் சூரியன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்யுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் தளபதி விஜய் அதர்வாவிடம் ஏதோ சொல்ல, அதனைக் கேட்ட அதர்வா சிரிக்கிறார். இந்த ஃபோட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதர்வாவின் சகோதரர் , தளபதி விஜய்யின் உறவினருக்கும் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இதனையடுத்து தளபதி விஜய்யும் அதர்வாவும் நெருங்கிய உறவினர்களாவர்.