உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வரும் வேளையில், மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த சூழலில், சில விஷயங்களை தள்ளி போடுவது கடினமாகவே உள்ளது. அப்படி ஒரு விஷயம் தான் திருமணம். பல்வேறு கனவுகளுடன் காத்திருக்கும் மணமக்கள் திருமணம் தள்ளி போவதினால் மிகவும் சோர்ந்து போகின்றனர். இந்நிலையில் சிலர் பாதுகாப்பான திருமணங்களை செய்வது தற்போது அதிகரித்து இருக்கிறது.
அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த "NGK" படம் உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய பெண் உதவி இயக்குனர் சுஜாவின் திருமணம் நேற்று(27-04-2019, திங்கள் கிழமை) காலை சென்னை சூலைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக, மணமக்களை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.