மெட்டி ஒலி மற்றும் தங்கம் சீரியல் மறு ஒளிபரப்பின் ரெஸ்பான்ஸ் குறித்து BARC India ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, அனைவரும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் டிவி சானல்கள் பழைய சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கியுள்ளனர். சக்திமான், ராமாயணம், மெட்டி ஒலி, தங்கம் உள்ளிட்ட சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இந்நிலையில் BARC India மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல்களுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தூர்தர்ஷனில் தற்போது மறு ஒளிபரப்பாகி வரும் சக்திமான் தொடருக்கு ரசிகர்கள் செம ஆதரவு அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தென் இந்தியாவில், சன் டிவியில் மறு ஒளிபரப்பாகி வரும் மெட்டி ஒலி மற்றும் தங்கம் சீரியல் இரண்டும், அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாக BARC தெரிவித்துள்ளது.
The return of the golden era shows on @DDNational and @SunTV engaged viewers on TV further, taking people down memory lane.#BARCIndia #WhatIndiaWatches #Covid19 #DD #SunTV #Shaktimaan #Buniyaad #DekhBhaiDekh #Circus #ByomkeshBakshi #ShrimaanShrimati #MettyOli #Thangham #Week13 pic.twitter.com/AMpuvqncdn
— BARCIndia (@BARCIndia) April 13, 2020