நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எப்.ஐ.ஆர் படம் படப்பிடிப்பு முடிந்து கொரோனா நேரத்திலும் எடிட்டிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு பற்றி மக்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே தனது அறிவிப்பேன் என்று கோரிக்கை வைத்தவர். பலரும் 'தாராளமாக வெளியிடலாம்' என்று கூறிய பின்பே வெளியிட்டார்.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு வெளியான அவரது 'மோகன்தாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. 'ராட்சஷன்' படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சைக்கோ கதையாக இது இருக்கலாம் என்று பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் போஸ்டரும் பாராட்டுகளைப் பெற்றது. பலரும் அதை பாராட்டி வந்த நிலையில், அந்த போட்டோவை எடுத்தது யார் என்ற உண்மையை தற்போது விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
ஷுட்டிங்கின்போது தனது பெண் தோழியான பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தான் இந்த போட்டோவை எடுத்தது என்று அவர் கூறியுள்ளார். விளையாட்டாக எடுத்த அந்த போட்டோவை வைத்து கிரியேட்டிவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய படக்குழுவினர் அதனை டிஜிட்டல் போஸ்டராக மாற்றியுள்ளனர். அந்தப் அந்த போஸ்டர் இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Feels great to read all your comments for the title announcement teaser of #Mohandas:) loved your enthusiasm and decoding skills too..
Here's a new poster of the film, waiting to start work on this one! @VVStudioz @im_the_TWIST @24frps @editorKripa @SundaramurthyKS @proyuvraaj pic.twitter.com/cd0wDzGd2I
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 12, 2020