BREAKING: தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தில் இணைந்த மேலும் ஒரு காமெடியன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கி, தளபதி விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Manobala to act with Thalapathy Viay and Nayanthara's Bigil

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் தளபதி விஜய், அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

இந்த படத்தில் வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாடுகிறார். இது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடும் முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விவேக், யோகி பாபு என என இரண்டு காமெடியன்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, இயக்குநரும், காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவருமான மனோபாலா, பிகில் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம்.

தொடர்புடைய இணைப்புகள்

Manobala to act with Thalapathy Viay and Nayanthara's Bigil

People looking for online information on Atlee, Bigil, Manobala, Vijay will find this news story useful.