விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில், தமிழ் கலாச்சாரம் என மதுமிதா கூறிய கருத்துக்கு பிக் பாஸ் வீட்டிற்குள்ளும், மக்கள் மத்தியிலும் பரவலான கருத்து இருந்தது.
பிக் பாஸ் வீட்டில், இதன் காரணமாக மதுமிதா வெளியேற்றப்பட வேண்டும் என ஹவுஸ்மேட்ஸ் ஒன்றுக் கூடி அவரை டார்கெட் செய்ததும், மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் மதுமிதாவிற்கு அளித்த ஆதரவும் அனைவரும் அறிந்தது தான். எனிலும், இந்த விவகாரத்தை இதற்கு மேலும் தொடர விரும்பாத அபிராமி, கேப்டன் பதவியேற்றவுடன் மதுமிதாவும், அபிராமியும் 5 நிமிடம் அமர்ந்து பேசினர்.
அப்போது பேசுகையில், பாலியல் துன்புறுத்தல் குறித்த கருத்தை பகிர்ந்துக் கொண்ட மதுமிதா, சிறிய ஆடைகள் அணிவது குறித்து பேசினார். அபிராமி-மதுமிதா இடையிலான 5 நிமிட உரையாடலை அலசிய கமல்ஹாசன், மதுமிதா மீது தனிப்பட்ட கோபம் இல்லை என்றும், அவர் கூறிய கருத்துக்கு ஆட்சேபனம் தெரிவித்தார்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு பெண்கள் அணியும் உடை தான் காரணம் என்பது போன்ற மதுமிதாவின் கருத்தை வன்மையாக கண்டித்த கமல்ஹாசன், ஒருபோதும் இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்கள் மீது பழிபோடும் கருத்து தவறு என்பதை கமல்ஹாசன் சுட்டிக் காட்டினார்.
ஆண்களுக்கு வக்காளத்து வாங்கும் விதமாக மதுமிதா பேசியதை ஏற்க முடியாது என்றும், இது போன்ற கருத்து பரவவும் கூடாது என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்களை பொறுப்பாளியாக்கும் இந்த னிலை மாற வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதற்கு அபிராமி தனது கருத்தாக, பெண்களை குறைக் கூறும் மனோபாவம் உள்ளவர்கள் தங்களது நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். குட்டையாக ஆடை அணியும் பெண்களை குறை சொல்லாமல், அவர்களிடம் தவறாக நடந்துக் கொள்ளும் ஒரு சிந்தனையை தூண்டும் அழுக்குப்படிந்த குற்றவாளியை தான் குறை கூற வேண்டும் என்றார்.