கே.ஜி.எப் தயாரிப்பாளர் பரபரப்பு புகார்... படத்தை சட்ட விரோதமாக ஒளிபரப்பிய சேனல்... !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க இப்போதைக்கு ஒரே வழி சமூக இடைவெளியை பின்பற்றுவது தான். இதனால் திரைத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.  பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய சேனல் KGF producer accuses channel for playing the film

இந்நிலையில் கன்னட படமான கே.ஜி.எப் பல மொழிகளில் வெளியாகி சக்கை போடு போட்ட படம். படத்தின் இரண்டாம் பாகத்துக்காக பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தை சிலர் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் பரபரப்பு புகார் எழுப்பியுள்ளார்.

இதுபற்றி அவர் "Every என பெயர் கொண்ட ஒரு தெலுங்கு லோக்கல் சேனலில் சட்ட விரோதமாக KGF போடப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வழக்கு தொடரப்படும். தற்போது சாட்டிலைட் உரிமை விற்பனைக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அது முடியும் சமயத்தில் ஒரு கேபிள் சேனல் இப்படி செய்துள்ளது. அதன் ஸ்கிரீன்ஷாட் மற்றும் வீடியோ என நிறைய ஆதாரம் எங்களிடம் உள்ளது" என தயாரிப்பாளர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Entertainment sub editor

கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய சேனல் KGF producer accuses channel for playing the film

People looking for online information on Channel, KGF, Producer, Yash will find this news story useful.