கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் - சொன்ன குட்டி ஸ்டோரி - GOOD NEWS, இன்னொரு BAD NEWS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவிற்கு இதுவரை தீர்வு காணப்படாததால் மக்களிடையே ஒரு வித பீதி எழுந்துள்ளது. தமிழகத்தில் வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்புக்குள்ளான நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனது தற்போதைய நிலை குறித்து ட்வீட் | Hollywood actor Tom Hanks

தமிழகத்தில் இதன் பாதிப்பு பெரிய அளவில் இல்லை எனினும் எளிதில் பரவலாம் என்பதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  பல்வேறு ஹாலிவுட் நடிகர்கள் தங்களுக்கு கொரோனா பாதித்துள்ளது குறித்து விழிப்புணர்வு பதிவு எழுதி வருகின்றனர்.

அதன் காரணமாக அண்மையில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனக்கும் தன் மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட அந்த பதிவு வைரலானது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் அவரது தற்போதைய பதிவில், ''குட் நியூஸ்:  கொரோனா உறுதியானதும் ஒருவாரம் கழித்தும் அறிகுறிகள் அப்படியே இருக்கிறது. காய்ச்சல் இல்லை. ஆனால் மற்றவை எல்லாம் அப்படியே இருக்கிறது.  கெட்ட செய்தி: ரம்மி விளையாடும்போது என் மனைவி 6 தடவை வெற்றி பெற்றுவிட்டார். நேசிக்கும் டைப்ரைட்டரை எடுத்து வந்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா பாதிப்புக்குள்ளான நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனது தற்போதைய நிலை குறித்து ட்வீட் | Hollywood actor Tom Hanks

People looking for online information on Corona Virus, Covid-19, Tom Hanks will find this news story useful.