விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மம்தா மோகன்தாஸ், தொடர்ந்து 'குரு என் ஆளு', 'தடையற தாக்க' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு மலையாள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்கள் மற்றும் தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது கொரோனாவால் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வரும் சூழலில் மம்தா மோகன்தாஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்தி வருவதாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “என்னை நானே தனிமைப்படுத்தி கொள்கிறேன்” என மாஸ்க் அணிந்தவாறு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.