அற்புதம்மாளின் கண்ணீரை துடைக்கும்விதமாக, "ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாக இருக்கட்டும் என்று ஜிவி பிரகாஷ் ட்வீட் போட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.. தொடர்ந்து சமூக பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து வருபவர். அதற்காக போராடியும் வருபவர். மக்களை பாதிக்கும் அடித்தள பிரச்சனைகளையும் கையில் எடுப்பவர். ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா மரணம், விவசாயிகள் பிரச்சனை, நடைமுறை அவலங்கள், அரசியல் விவகாரம் என அனைத்து விதமான சீர்கேடுகளுக்கும் குரல் கொடுத்து வருபவர்.
இவரது சில ட்விட்டர் அதிகம் பேசப்படுபவைகளாக இருக்கும். அதேபோலதான் பேரறிவாளன் விவகாரத்திலும் நியாயம் கேட்டுள்ளார். அற்புதம்மாள் இன்றைக்கு குமுறி அழுது ஒரு ட்வீட் போட்டுள்ளார். 28 வருஷம் ஆகியும் என் புள்ளை வரலை.. எங்களுக்கு இன்னும் விடியல என்று கண்ணீர் பதிவு போட்டார். இந்த பதிவு தமிழக மக்களையே கலங்க செய்தது. இதற்குதான் ஜிவி பிரகாஷ் ஆதரவு தெரிவித்து தனது நிலைப்பாட்டை ட்வீட்டாக போட்டுள்ளார். அதில், "ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும். இத்தாயின் வேதனை தணிப்போம். நீதியை விதைப்போம்" என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும்.
இத்தாயின் வேதனை தணிப்போம். நீதியை விதைப்போம்.#29YearsTooMuchGovernor pic.twitter.com/YVmSjgPxs6
— G.V.Prakash Kumar (@gvprakash) June 11, 2019