Charminar Desk News US

'இந்தியன் 2' ஷங்கரின் VERA LEVEL பாராட்டு - அழகு, கியூட், ஸ்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமுத்திரக்கனி - சுனைனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சில்லுக்கருப்பட்டி' திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 27 அன்று வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேற்பை பெற்று வருகிறது.

Director Shankar Praised Suriya and Samuthirakani's Sillu Karuppatti film

ஹலீதா சமீம் இயக்கியுள்ள இந்த படத்தை டிவைன் புரொடக்ஷன் தயாரிக்க, நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் லீனா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

4 மாறுபட்ட காதல் கதைகள் கொண்ட இந்த படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமின் என 4 பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரதீப் குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குநர் ஷங்கர், சில்லுக்கருப்பட்டி திரைப்படம் அழகான, அர்த்தமுள்ள, கியூட்டான, ஸ்வீட்டான, புத்துணர்வான படம். மரக்கமுடியாத கவிதை. இயக்குநர் ஹலீதா ஷமீம் சிறப்பான பணி செய்துள்ளார்கள். தயாரிப்பாளர்கள் நடிகர்கள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor

Director Shankar Praised Suriya and Samuthirakani's Sillu Karuppatti film

People looking for online information on Halitha Shameem, Shankar, Sillu Karupatti, Suriya will find this news story useful.