’புதிய பாதை’ படம் மூலம் தன் திரையுலகப்பயணத்தை தொடங்கியவர் பார்த்திபன். நடிப்பு, இயக்கம் என்று இரண்டு தரப்பிலும் கலக்கிய அவர் கடந்த 2019ம் ஆண்டு எடுத்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ பரவலாக கவனம் ஈர்த்தது.
ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டுமே கொண்டு சுமார் 2 மணிநேரம் ஓடக்கூடிய இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஒரே ஷாட்டில் ஒரு படத்தை இயக்க போவதாக இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இப்படத்துக்கு ‘இரவின் நிழல்’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு வெளியான ’விக்டோரியா’ எனும் ஜெர்மானிய திரைப்படம் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. பார்த்திபனின் படமும் சர்வதேச கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.