வடசென்னை தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என நினைத்தேன் ஆனால்…! -தனுஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் வெற்றிமாற இயக்கத்தில்  பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் ‘அசுரன் ’என்ற படத்தில் நடித்துள்ளார். கலைப்புலி  எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

Dhanush Speech At Vetrimaran's Asuran Audio Launch

இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்  இந்தப் படத்தை அக்டோபர் 4 ஆம் தேதி திரைக்குக் கொண்டுவரும் விதமாக நேற்று இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்  தனுஷ் கூறியதாவது :

"அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக  இருக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக  இருந்தது. கென்னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி ,அவரோடு வொர்க் பண்றது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார். வடசென்னை தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் அசுரன் தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும். மக்கள் தான் வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது. விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது" என்றார்.

வடசென்னை தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என நினைத்தேன் ஆனால்…! -தனுஷ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Speech At Vetrimaran's Asuran Audio Launch

People looking for online information on Asuran, Dhanush, GV Prakash, Vetrimaran will find this news story useful.